அரசியல் குழப்பத்தில் மீண்டும் தள்ளப்பட்ட பிரான்ஸ்: நம்பிக்கை வாக்கெடுப்பில் சறுக்கிய பிரதமர்
பிரான்ஸ் பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து, அந்நாட்டில் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.
முழுமையாக அறிந்திருந்தும்
கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானால் நியமிக்கப்பட்ட பிரதமர் பிரான்சுவா பேய்ரூ, நம்பிக்கை வாக்கெடுப்பில் சறுக்கியுள்ளார். 74 வயதான பேய்ரூ, தப்பிக்க வாய்ப்பில்லை என்பதை முழுமையாக அறிந்திருந்தும் இந்த நம்பிக்கை தீர்மானத்தை தானாக முன்வந்து முன்னெடுத்தார்.
அரசாங்க செலவினங்களை 44 பில்லியன் யூரோக்கள் வரையில் குறைக்கும் நோக்கில் அவர் கொண்டு வந்த கடுமையான சிக்கன பட்ஜெட்டிற்கு பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்தே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளால் பிரான்ஸ் இளையோர்கள் கடன் சுமையில் சிக்கும் ஆபத்திருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்சின் தேசியக் கடன் தற்போது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 114 சதவீதமாக உள்ளது.
இந்த நிலையில், அரசாங்கத்தை கவிழ்க்க உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது, ஆனால் உண்மையை அழிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் பேய்ரூ தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் தவறுகளை
மட்டுமின்றி, பிரான்ஸ் தனது கடன் நெருக்கடியைத் தீர்க்க பணக்காரர்களுக்கு வரி விதிக்க முயன்றால் பிரித்தானியாவின் தவறுகளை மீண்டும் செய்ய நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
நமது அண்டை நாடான பிரித்தானியா வரியிலிருந்து விலக்கு பெற்ற வெளிநாட்டினருக்கு வரி விதிக்க முடிவு செய்தது. அந்த நெளிநாட்டினர்கள் வெளியேறினால், உடனடி விளைவாக மிலனில் சொத்து விலைகளில் ஒரு அதிரடி உயர்வு ஏற்படும்.
தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்சுவா பேய்ரூ தோல்வி கண்டுள்ள நிலையில், ஐந்தாண்டுகளில் 6வது பிரதமருக்கான அரசியல் நெருக்கடியை பிரான்ஸ் எதிர்கொள்ள இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |