பிரான்ஸ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மிஷெல் பார்னியேர்
பிரான்சின் பிரதமர் மிஷெல் பார்னியேர் (Michael Barnier) நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததையடுத்து இன்று (வியாழக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்று காலை, எலிசி அரண்மனை (Elysee Palace) சென்ற அவர், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனுடன் ஒரு மணி நேரம் ஆலோசனைக்குப் பிறகு வெளியேறினார்.
ராஜினாமா செய்தாலும், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மிஷெல் பார்னியேர் மற்றும் அவரது அமைச்சரவை தற்காலிக நிர்வாகத்தில் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என எலிசி அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி மேக்ரோன் உள்ளூர் நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நாட்டுக்கு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு பிரதமராக நியமிக்கப்பட்ட பார்னியர், தற்போது 1958 முதல் இதுவரை குறைந்த காலம் பதவி வகித்த பிரதமராகியுள்ளார்.
வலதுசாரி மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் இரு தரப்பினரும் நேற்று பார்னியர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தனர்.
331 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்ததால், பார்னியேர் அவரது பதவியை இழக்க நேரிட்டது.
பார்னியேரின் அரசாங்கம் ஒரு வாக்கெடுப்பு இல்லாமல் ஒரு சமூக பாதுகாப்பு வரவுசெலவுத் திட்ட மசோதாவை நிறைவேற்ற பிரெஞ்சு அரசியலமைப்பின் 49.3 விதியைப் பயன்படுத்தியது. இதுவே எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது.
இந்த மசோதா £50 பில்லியன் மதிப்பிலான வரி உயர்வு மற்றும் செலவுக் குறைப்புகள் மூலம் அரசின் நிதி குறைபாடுகளை சமாளிக்க திட்டமிடப்பட்டது.
தீர்மானத்திற்கு முந்தைய உரையில், மிஷெல் பார்னியேர், "பிரான்சிற்காக பணியாற்றியதில் எனக்கு பெருமை இருக்கிறது. இந்த தீர்மானம் நாட்டின் நிலையை மேலும் கடினமாக்கும் என்பது நிச்சயம்" எனக் கூறினார்.
மேக்ரோனும் பதவி விலக வேண்டும்
பார்னியரின் நீக்கத்திற்கு பிறகு, மேக்ரோனின் ராஜினாமாவுக்கும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஆன்லைன் கருத்துக்கணிப்பில் 1,000 வாக்காளர்களில் 64 சதவீதம் பேர் மேக்ரோனும் பதவி விலக வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும், மேக்ரோன் 2027 வரை பதவியில் தொடரும் மண்டேட்டைக் கொண்டிருப்பதால், அவர் பதவி நீக்கப்பட முடியாது.
மேக்ரோன், புதிய பிரதமரை நோட்ரே டேம் கோவிலின் திறப்பு விழாவுக்கு முன் நியமிக்கத் திட்டமிட்டு, பல அரசியல்வாதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France Prime Minsiter Resign, France PM Michel Barnier resigns after no confidence motion, France President Emmanuel Macron