சுவிட்சர்லாந்தின் எல்லைக் கட்டுப்பாடுகள்: அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்
பிரான்சில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டின்போது அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் ஜெனீவா மாகாண அதிகாரிகள் ஜெனீவாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான எல்லையில் எல்லைக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினார்கள்.
சுவிட்சர்லாந்தின் எல்லைக் கட்டுப்பாடுகள்
பிரான்சின் Evian-les-Bains நகரில், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல், 17ஆம் திகதி வரை G7 உச்சி மாநாடு நடைபெற்றது.

விடயம் என்னவென்றால், 2003ஆம் ஆண்டு, பிரான்சின் இதே Evian-les-Bains நகரில் G8 உச்சி மாநாடு நடைபெற்றபோது, மாநாட்டுக்கு முந்தைய இரவு, உலகமயமாக்கலுக்கு எதிரான அமைப்பொன்றைச் சேர்ந்த சிலர் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டமாக துவங்கிய விடயம், சூறையாடலில் முடிந்தது. ஆடம்பர பொருட்கள் விற்பனை நிலையங்கள், கடைகள் என அனைத்தையும் நொறுக்கிய ஒரு கூட்டம் பொருட்களை சூறையாடியது.

ஆக, இம்முறையும் அதேபோல் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என முடிவு செய்தது சுவிஸ் அரசு.
ஆகவே, மாநாடு நடைபெறும் Evian-les-Bains நகரை ஒட்டியுள்ள ஜெனீவா மாகாணத்தின் எல்லைகளில் சுமார் 30 எல்லைகள் மூடப்பட்டன.
ஜெனீவாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் ஏழு இடங்களில் மட்டுமே எல்லை வழியாக மக்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்
இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாடுகள் பலனளித்ததாக ஜெனீவா மாகாண கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாநாடு நடைபெறும் காலகட்டத்தில், ஜெனீவாவுக்குள் நுழைய முயன்ற சுமார் 40 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கத்திகள், கோடரிகள், லத்திகள் மற்றும் வெடிமருந்துகள் முதலான பல அபாயகரமான விடயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆக, எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் வன்முறைக்கும்பல்கள் வன்முறையில் ஈடுபடும் திறன் கணிசமாக குறைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |