பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்வோர் நுழைய உதவி செய்யும் பிரான்ஸ் பொலிசார்
புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய பிரான்ஸ் பொலிசார் உதவுவதாக பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்வோருக்கு உதவும் பிரான்ஸ் பொலிசார்
வடபிரான்சிலுள்ள Gravelines என்னுமிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரை ஒன்றிலிருந்து சுமார் 100 பேருடன் சிறுபடகொன்று புறப்பட்டுள்ளது.
படகு பிரித்தானிய கடல் எல்லையைத் தொட்ட நேரத்தில், பிரெஞ்சு பொலிசார் அந்தப் படகிலிருந்த 24 பேரை தங்கள் படகில் ஏற்றிக்கொண்டு பிரெஞ்சுக் கரைக்குத் திரும்பினார்களாம்.
புறப்படும்போது, அந்த படகிலிருந்தவர்களிடம், ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் காத்திருங்கள், பிரித்தானிய அதிகாரிகள் உங்களை மீட்பார்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்களாம் பிரெஞ்சு அதிகாரிகள்.
திருப்பி அழைத்துக்கொள்ளப்பட்ட புலம்பெயர்வோரில் ஒருவர் யேமன் நாட்டைச் சேர்ந்தவரான முகம்மது (Mohammed Al Adiroos, 24).
சுமார் 100 பேர் அந்த சிறிய படகில் இருந்ததால், ஒருவேளை படகு கவிழ்ந்துவிடலாம் என்பதாலேயே படகிலிருந்து 24பேரை திருப்பி அழைத்துக்கொண்டார்கள் என்கிறார் முகம்மது.
இதற்கிடையில், பிரான்ஸ் அதிகாரிகள் 24 பேரை திருப்பி அழைத்துக்கொள்ளமுடியம் என்றால், மொத்த புலம்பெயர்வோரையும் தங்கள் நாட்டுக்கு அழைத்துக்கொள்ளவேண்டியதுதானே என்கிறார் பிரித்தானிய அதிகாரி ஒருவர்.
ஆக, சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய பிரான்ஸ் வெளிப்படையாகவே உதவுவதாக பிரான்ஸ் மீது பிரித்தானிய தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |