பிரான்சில் காரின் உள்ளே இருந்த பெட்டியை திறந்த பார்த்த பொலிசாருக்கு கிடைத்த தடை செய்யப் பட்ட பொருள்! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பிரான்சில் காரில் செல்லும் போதே மொபைல் போனை பயனடுத்திய நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 8-ஆம் வட்டாரத்தின் Place Charles-de-Gaulle பகுதியில் வீதி கண்காணிப்பில் பிராந்திய தொடர்புப்படை brigade territoriale de contact காவல்துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில், காரில் வந்த நபர், காரை ஓடிய படியே செல்போனில் பேசிக் கொண்டு வந்தார். இதைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர்.
அதன் பின் விசாரணை மேற்கொண்ட போது, அவர் கூறிய பதில்கள் முன்னுக்கு பின்னாக இருந்ததால், பொலிசாருக்கு அந்த நபரின் மீடு சந்தேகம் வலுத்துள்ளது.
அதுமட்டுமின்றி குறித்த நபர் கஞ்சா பயன்படுத்தியதற்கான அனைத்து அறிகுறியும் இருந்தது. இதனால் உடனடியாக பொலிசார் காரை சோதனை செய்த போது, காருக்குள் சுமார் 2,630 சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அது பிரான்ஸ் நாட்டில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை ரகசியமாக கடத்தி வந்திருப்பது விசாரணையில் உறுதியதான், பொலிசார் அவரை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட அந்த சிகரெட்டின் மதிப்பு 13,000(இலங்கை மதிப்பில் 30 லட்சம் ரூபாய்க்கு மேல்) யூரோவுக்கு மேல் இருக்கும் என்றும், கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.