பிரான்சில் முகக்கவசம் அணியாத நபரை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! என்ன வைத்திருந்தான் தெரியுமா?
பிரான்சில் முகக்கவசம் அணியாத நபரை பொலிசார் சோதனை செய்த போது, அவன் பையில் வைத்திருந்த ஆயுதத்தைக் கண்டு பொலிசார் அதிர்ந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரான்சில் முகக்கவசம் பொது இடங்களில் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதை மீறினால், அபராதமோ அல்லது பொலிசாரின் நடவடிக்கையை ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை, Orly நகரின் rue Jean-Prouvé வீதியில் சில நபர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர். மக்கள் கூட்டமாக இருந்ததால், பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து வர, பொலிசார் வருவதைக் கண்டு சிலர் அங்கிருந்து தப்பிவிட்டனர். ஆனால், சிலரை பொலிசாரை பிடித்து விசாரித்துக் கொண்டிருந்த போது, ஒருவனிடம் கைத்துப்பாக்கி இருப்பதைக் கண்டு சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி, Smith & Wesson நிறுவனம் தயாரித்த புத்தம் புதிய கலிபர் வகை துப்பாக்கி எனவும் அதில் ஆறு குண்டுகளும் இருப்பதையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், 31 வயது மதிக்கத்தக்க இந்த நபர் Orly நகரில் வசிப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் பொலிசார் அவரை ஆயுதம் வைத்திருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
31 வயதுடைய குறித்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த நபர் Orly நகரில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.