பள்ளிக்கு வராமல் இருந்த சிறுமியின் வீட்டிற்கு சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! துயர சம்பவத்தின் பின்னணி
பிரான்சில் தாய் இறந்தது தெரியாமல், இரண்டு மகள்கள் அவருடன் வசித்து வந்துள்ள சம்பவம் கடும் வேதனையை கொடுத்துள்ளது.
பிரான்சின் Le Mans (Sarthe) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் சிறுமி, கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை. பள்ளிக்கு வராததற்கான காரணத்தையும் அவர் கூறவில்லை.
இதனால் குறித்த பள்ளி நிர்வாகம், அவர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயன்ற போது, எந்த ஒரு தகவலும் இல்லாத காரணத்தினால், வேறும் ஏதும் அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக பொலிசார் சிறுமியின் வீட்டிற்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்த போது, கடும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அந்த வீட்டில் அந்த சிறுமியின் தாய் இடந்து கிடந்துள்ளார்.
குறித்த சிறுமியும், அவருடைய தங்கையும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின் விசாரணை மேற்கொண்ட போது, சிறுமிகள், எனது தாயார் உறங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைதத்தாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, அவரின் உடலை மீட்ட பொலிசார்,பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.