பிரான்சில் காவல் நிலையத்திற்குள் புகுந்து.. நிர்வாணமாக நின்ற பெண்! பொலிசாரிடம் சொன்ன வினோத காரணம்
பிரான்சில் காவல் நிலையத்திற்குள் நுழைந்த பெண் ஒருவர் திடீரென்று தன் ஆடைகளை எல்லாம் களைத்து நிர்வாணமாக நின்ற சம்பவம் அங்கிருந்த பொலிசார் பலரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரான்சின், பாதுகலே மாவட்டத்தின் Arras நகரில் இருக்கும் காவல் நிலையத்திற்கு, சுமார் 73 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த 16-ஆம் திகதி, உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு நுழைந்து தன்னை கைது செய்யும் படி அங்கிருந்த பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, பொலிசார் உடனடியாக நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று விசாரித்த போது, அவர் எந்த ஒரு தவறும் செய்யவில்லை, சிறை அனுபவம் எப்படி இருக்கும் என்பதற்காக கைது செய்யும் படி கூறுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், பொலிசார் சரியான காரணம் இன்றி யாரையும் கைது செய்ய முடியாது என்று கூறவே, உடனே அப்பெண் தான் அணிந்திருந்த ஆடைகளை களைத்து நிர்வாணமாக அப்படியே நின்றார். அ
தன் பின் திடீரென்று பொலிசார் ஒருவரின் துப்பாக்க்கியை பறிக்க முயன்றார்.
இதனால் பொலிசார் உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது, தன்னுடைய 73 வருட வாழ்க்கையில், நான் ஒரு முறை கூட பொலிசாரால், கைது செய்யப்படவில்லை, பொலிசாரின் கைது நடவடிக்கை எப்படி இருக்கும்? அதன் பின் என்ன நடக்கும் என்பதை நான் அறிய வேண்டும், அதற்காகவே இப்படி செய்தேன் அவர் கூறியுள்ளார்.
பொலிசார் அவருக்கு அறிவுரை கூறி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.