பிரான்சில் கைது செய்யும் போது குற்றவாளி செய்த பகீர் செயல்! நாயை சுட்டுக் கொன்ற பொலிசார்
பிரான்சில் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, பொலிசார் மீது நாயை ஏவி கடிக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரான்சின் Corbeil-Essonnes (Essonne) நகரில், கடந்த புதன் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 9.30 மணி அளிவில், பொலிசார் அங்கு குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.
அப்போது அந்த குற்றவாளில், தான் வளர்த்து வந்த mastiff இன வளர்ப்பு நாயை, பொலிசார் மீது பாயும் படி கூறியதால், அந்த நாய் உடனடியாகப் பொலிசாரை குறி வைத்து அவர்களை தாக்கியது.
இதில் பொலிசார் ஒருவரின் கால்களை நாய் கடிக்க துவங்கியதால், நிலையை கட்டுக்குள் கொண்டு வர, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நாய் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டின் காரணமாக, அது சம்பவ இடத்திலே உயிரிழக்க, அதன் பின் பொலிசார் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
காயமடைந்த பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.