பிரான்சில் உலாவி வரும் மர்ம மிருகம்! மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை
பிரான்சில் மாவட்டம் ஒன்றில் மர்மம் தென்பட்டுள்ளதால், மக்கள் இதைக் கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் Frévent மற்றும் Auxi-le-Château நகரங்களுக்கிடையே கடந்த புதன் கிழமை மர்ம மிருகம் ஒன்று தென்பட்டுள்ளது. ஆனால், அந்த மிருகம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இதனால் தேசிய ஜொந்தமினர், உள்ளூர் வேட்டைக்காரர்கள் உதவியுடன், குறித்த மிருகத்தை பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அது குறிப்பாக சிறுத்தை அல்லது புலியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் அது இராட்சத உருவில் இருந்ததால், அதையும் உறுதிபடுத்த முடியவில்லை.
Opération de #capture:
— Préfet Pas-de-Calais (@Prefet62) October 16, 2021
Un animal errant a été repéré à plusieurs reprises entre Frévent et Auxi-le-Chateau.Toute personne possédant des informations sur cet animal permettant de le capturer vivant est invitée, même de manière anonyme, à se rapprocher des services de gendarmerie. pic.twitter.com/WKpD9quD4G
இதனால், பொலிசார் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், சந்தேம்படும் படி ஏதேனும் மிருகம் தென்பட்டாஅல் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் சிலர் கடும் பீதியில் உள்ளனர்.