பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! கண்டுபிடித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை
பிரான்சில் கிறிஸ்துமஸ் சந்தைகளை குறி வைத்து போலி யூரோ தாள்கள் உலா வருவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவலுக்கிடையே, உலகில் பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்திற்கான வேலைகள் துவங்கிவிட்டது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் மக்கள் கிறிஸ்துமஸை கொண்டாட துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், பிரான்ஸ் பொலிசார் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், கிறிஸ்துமஸ் தின சந்தைகளை குறி வைத்து, போலி யூரோ தாள்கள் பரவி வருகிறது.
நாட்டில், தென்கிழக்கு பிராந்தியங்களை அதிகமாக குறி வைத்து 20 யூரோ, 50 யூரோ மற்றும் 100 யூரோக்களில் போலி தாள்கள் உலா வருகிறது. கடந்த வாரம் நீஸ் நகரில் இது போன்ற போலி தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
போலி தாள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 75.000 யூரோ அபராதமும் விதிக்கப்படும் என்று பொலிசார் எச்சரித்துள்ளனர்.
மேலும், பிரான்சில் கடந்த மாதத்தில் மட்டும் 130,000 யூரோ போலி தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால், மக்கள் கவனமுடன் இருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.