பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் அரசு தரப்பு வெளியிட்ட முக்கிய தகவல்
கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான கால அட்டவணையை வெளியிட பிரான்ஸ் தயாராகி வருவதாக அரசாங்க செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கொரோனா நோய்த்தொற்றுகளின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், புதிய தடுப்பூசி விதிகள் கட்டுப்பாடுகளை தளர்த்த உதவும் என அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் கூறினார்.
எனினும், கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதற்கான திட்டங்களை விவரிக்க அட்டல் மறுத்துவிட்டார்.
பிரான்சில் மக்கள் பொது இடங்களுக்குள் நுழைவதற்கும் நீண்ட தூர ரயில்களைப் பயன்படுத்துவதற்கும் மக்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் வைத்திருக்க வேண்டும்.
இந்த விதி எதிர்வரும் நாட்களில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நேற்று பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அரை மில்லியன் எட்டியது குறிப்பிடத்தக்கது.