போரை எதிர்கொள்ளத் தயாராகும் பிரான்ஸ்: மக்களுக்காக அரசு தயார் செய்யும் ரகசிய கையேடு
ரஷ்யாவால் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், இனி அமெரிக்காவை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் பல வந்துவிட்டன.
பிரான்சைப் பொருத்தவரை, ஒரு படி முன்னே போய், போர் போன்ற விரும்பத்தகாத சூழல் உருவானால், தங்களைக் காத்துக்கொள்வது எப்படி என்பதை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க, பிரான்ஸ் அரசு தயாராகிவருகிறது.
மக்களுக்காக அரசு தயார் செய்யும் ரகசிய கையேடு
பிரான்ஸ் அரசு, போர், சுகாதார நெருக்கடி அல்லது இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டால், அதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வது எப்படி என்பதை மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக ‘உயிர் பிழைக்க உதவும்’ கையேடு ஒன்றைத் தயாரித்து வருவதாக ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன.
அந்தக் கையேடு, மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று, உங்களையும், உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாத்துக்கொள்வது எப்படி, இரண்டு, உடனடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் என்ன செய்வது, மூன்று, உங்கள் சமுதாயத்தைக் காக்கும் நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வது எப்படி என்னும் விடயங்கள் அந்தக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், ஆபத்து நேரத்தில் உயிர் பிழைத்து வாழ உதவியாக ’survival kit' ஒன்றை தயார் செய்து வைத்துக்கொள்ள அந்த கையேடு அறிவுறுத்துகிறது.
குறைந்தபட்சம் ஆறு லிற்றர் தண்ணீர், ஒரு டசன் டின் உணவு, பேட்டரிகள், டார்ச், காய்ச்சல் மாத்திரை, உப்புக்கரைசல் மற்றும் பேண்டேஜ் போடத்தேவையான பொருட்கள் ஆகியவை அந்த survival kitஇல் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், ரஷ்யாவால் ஆபத்து ஏற்படும் பட்சத்தில், அமெரிக்கா நமக்கு உதவும் என நம்புகிறோம்.
அமெரிக்கா உதவவில்லையானால், நாம் நம்மைக் காத்துக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |