100 யூரோ பத்தாது.. 200 கொடுங்க: பிரான்ஸ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஜனாதிபதி வேட்பாளர்
பிரான்சில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, இழப்பீடு வழங்வது தொடர்பில், ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென், 200 யூரோக்கள் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரான்சில் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை உயர்வை எதிர்கொள்ள உதவும் வகையில், மாதந்தோறும் நிகர வருமானம் 2,000 யூரோ அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 100 யூரோ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, கார் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டாதவர்கள் உட்பட சுமார் 34 மில்லியன் பிரான்ஸ் மக்களுக்கு பணவீக்கக் உதவிக்தொகை தானாகவே செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் Marine Le Pen, இந்த திட்டம் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், மக்களிடம் இருந்து தான் பணத்தை வரியாக பெறுகிறோம்.
ஆனால் அவர்களின் அந்த வரிப்பணத்தில், அவர்களுக்கு ஒரு குறைந்த பணத்தை கொடுப்பது நல்லது கிடையாது.
இதனால் அரசு தற்போது அறிவித்துள்ள இந்த இழப்பீடு தொகையை இரண்டு மடங்காக, அதாவது 200 யூரோவாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.