தொண்டு நிறுவனம் சார்பில் விடுமுறைக்காக சென்ற இடத்தில் பயங்கர தீ: பிரான்சில் பயங்கரம்
பிரான்சில், தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் விடுமுறை இல்லம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கற்றல் குறைபாடு கொண்ட 11 பேர் தீயில் கருகி பரிதாபமாக பலியான சம்பவம் பிரான்சில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 பேர் பலி
நேற்று காலை 6.30 மணியளவில், அந்த விடுமுறை இல்லத்தில் தீப்பற்றியுள்ளது. அந்தக் கட்டிடத்தின் சில பகுதிகள் மரத்தாலானதாக இருந்ததால் தீ வேகமாக பரவியுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்ததால், அவர்களால் கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாமல் போயிருக்கிறது.
GETTY IMAGES
இந்த கோர விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்கள். 17 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள், ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சுமார் 80 தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், விரைவாக செயல்பட்டமைக்காக அவர்களை உள்துறை அமைச்சரான Gérald Darmanin பாராட்டியிருந்தார்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட பிரதமர்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு நேரில் வந்த பிரான்ஸ் பிரதமரான Élisabeth Borne, தனது கவலையை வெளிப்படுத்தியதுடன், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் நடந்தவை குறித்து விசாரித்து அறிந்துகொண்டார்.
bbc
தீப்பற்றியதற்கான காரணம் தெரியவராத நிலையில், இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |