மேக்ரான் எங்கே? தேர்தல் பரபரப்பின் இடையே மாயமான பிரான்ஸ் ஜனாதிபதி
கடைசியாக, தேர்தலில் வாக்களிப்பதற்காக கருப்பு ஜாக்கெட், கூலிங் கிளாஸ் என ராக் ஸ்டார் கெட் அப்பில் வந்தவர்தான் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். அப்புறம் அவரை எங்கும் பார்க்கமுடியவில்லை. எங்கே போனார் மேக்ரான்?
மாயமான பிரான்ஸ் ஜனாதிபதி
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் சுற்றுத் தேர்தலில் வாக்களித்துச் சென்ற பின், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை பொது இடங்களில் பார்க்கமுடியவில்லை.
விடயம் என்னவென்றால், மேக்ரான் வெளியில் தலைகாட்டுவதை அவரது கூட்டணிக் கட்சியினர் விரும்பவில்லையாம். பிரச்சாரம் செய்வதை நிறுத்துமாறு அவர்கள் மேக்ரானிடம் கூறியுள்ளரகளாம். பிரச்சாரத்தில் கூட அவரது புகைப்படம் இல்லையாம், அவை நீக்கப்பட்டுவிட்டனவாம்.
மேக்ரான் தேர்தல் அறிவிக்கும்போதே, அது சரியில்லை, அவரது முடிவு அவருக்கு எதிராக திரும்பிவிடும் என்று கணித்திருந்தார்கள் அரசியல் வல்லுநர்கள். இப்போது அவர்கள் கூறியதுபோலவே ஆகிவிட்டது.
முதல் சுற்று தேர்தலில் மேக்ரான் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்க, Marine Le Penஇன் வலதுசாரிக் கட்சியான National Rally கட்சி முன்னிலை வகிக்கிறது.
இப்போது, மற்ற கட்சிகள் கரம் கோர்த்து, எப்படியாவது National Rally கட்சியை பின்னுக்குத் தள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கும் நிலை உருவாகிவிட்டது.
இருந்தாலும், மேக்ரான் இப்படி தலைமறைவாகவே இருந்துவிடமுடியாது. ஏனென்றால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இரண்டாவது சுற்று தேர்தலில் வெற்றி பெறவிருக்கும் கட்சியின் வேட்பாளரை அவர் பிரதமராக பதவியில் அமர்த்தியாகவேண்டுமே!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |