வேறொரு கொரோனா தடுப்பூசி... பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் வெளியிட்ட முக்கிய தகவல்
கொரோனா தடுப்பூசியான ஸ்ராஸெனக்காவிற்கான ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை என பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
பிரான்சில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் பிரான்சில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பாவின் எதிர்காலம்' என்ற மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பிரித்தானியா மற்றும் சுவீடன் நாடுகள் இனிமேல் கொரோனா தடுப்பு ஊசியான, AstraZeneca -விற்கான ஒப்பந்தங்கள் எதையும் புதுப்பிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.
இதையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானும், பிரான்சில் நாங்களும், ஐரோப்பாவும் தொடர்ந்தும் AstraZeneca-வை புதுப்பிக்க போவதில்லை. அதே சமயம் ஆபத்தான நேரத்தில், எங்களுக்கு உதவிய AstraZeneca-வை எப்போதும் மறக்க முடியாது.
ஆனால் தற்போதுள்ள கொரோனா வைரஸ்கள் பல்வேறு கோணங்கள் உருமாறி தீவிரமாக பரவி வருவதால், அதை எதிர்க்கும் சக்தியுள்ள தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.