நெட்ப்ளிக்ஸ் தொடரில் நடிக்க அழைப்பு வரவில்லையா என கேட்ட ஊடகவியலாளர்கள்: மேக்ரானின் பதில்
நெட்ப்ளிக்ஸ் தொடர் ஒன்று தொடர்பில், பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ள ஒரு விடயம்தான் இந்த செய்தியின் சாராம்சம்!
அரசியலாகியுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர்
கோவிட் காலகட்டத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு நெட்ப்ளிக்ஸ் தொடர் ’Emily in Paris’ என்னும் தொடர்.
அந்த தொடரின் கதாநாயகியான எமிலி என்னும் இளம்பெண், வேலை விடயமாக அமெரிக்காவிலிருந்து பாரீஸுக்கு வருவார்.
பாரீஸில் அவர் எதிர்கொள்ளும் சவால்கள், வேலைக்காக அலைவது, புதிய நட்புகள், காதல் என அவர் எப்படி பாரீஸ் வாழ்வை சமாளிக்கிறார் என்னும் ரீதியில் செல்கிறது அந்த தொடர்.
மேக்ரான் சூழுரை
இந்நிலையில், தொடரின் புதிய சீஸனில், எமிலி பாரீஸிலிருந்து ரோமுக்கு செல்வதாக கதை செல்கிறது.
அந்த விடயம் பிரான்ஸ் அரசியல் வரை எதிரொலித்துள்ளது.
Caro @EmmanuelMacron stai tranquillo: Emily a Roma sta benissimo. E poi al cuor non si comanda: facciamo scegliere lei ?https://t.co/n0EgAfMhrl
— Roberto Gualtieri (@gualtierieurope) October 9, 2024
எமிலி இன் பாரீஸ் என பெயர் வைத்துக்கொண்டு, எமிலி ரோமுக்கு சென்றால் நன்றாகவா இருக்கும் என்று கூறியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், எமிலியை எப்படியாவது திரும்ப பாரீஸுக்கு கொண்டுவர கடுமையாக போராடுவோம் என்று வேடிக்கையாக கூறியுள்ளார்!
விடயம் என்னவென்றால், இந்த தொடரில், இமானுவல் மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரானும் தலைகாட்டியுள்ளார்.
அந்த தொடரில் நடிக்க உங்களுக்கு அழைப்பு வரவில்லையா என ஊடகவியலாளர்கள் மேக்ரானைக் கேட்க, என் மனைவி பிரிஜிட் அளவுக்கு நான் அழகில்லை என்றும் வேடிக்கையாக கூறியுள்ளார் மேக்ரான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |