இலங்கையில் பிரான்ஸ் ஜனாதிபதி! என்ன டுவிட் செய்துள்ளார்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இலங்கைக்கு வருகைபுரிந்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை புரிவது இதுவே முதல்முறையாகும்.
இலங்கை பிரதமருடன் சந்திப்பு
நேற்று, அதாவது ஜூலை 28 அன்று இரவு, இலங்கை சென்றடைந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். இன்று, மேக்ரானும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் தொடர்பில் கலந்துரையாடினர்.
இலங்கைக்கு நிதியுதவி செய்யும் நாடுகளில் நான்காவது பெரிய நாடான பிரான்ஸ், இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க உதவுவதாக உறுதியளித்துள்ளது .
தலைவர்கள் கருத்து
இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75 வது ஆண்டைக் குறிக்கும் வகையில், மேக்ரான் இலங்கை வந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின் ட்விட்டரில் அது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேக்ரான், இலங்கை மற்றும் பிரான்ஸ் இரண்டும் இந்தியப் பெருங்கடல் நாடுகளாகும், அவை ஒரே இலக்கைப் பகிர்ந்து கொள்கின்றன. திறந்த, உள்ளடக்கிய மற்றும் செழிப்பான இந்தோ பசிபிக் என்பதுதான் அந்த இலக்கு. கொழும்பில் நாங்கள் அதை உறுதிப்படுத்தினோம். 75 ஆண்டுகால வலிமையான தூதரக உறவுகள் மூலம் கூட்டாண்மையின் புதிய சகாப்தத்தை துவக்க நம்மால் முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |