பிரான்ஸ் ஜனாதிபதியின் மொபைல் எண்ணையே மாற்ற வைத்த பிரச்சினை
இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உலகத்தலைவர்களின் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட எண்களில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேலின் மொபைல் எண்ணும் உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இமானுவல் மேக்ரான் தனது மொபைலயும், மொபைல் எண்ணையும் மாற்றிவிட்டதாக ஜனாதிபதி மாளிகை வட்டார அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இமானுவல் மேக்ரானுக்கு பல எண்கள் உள்ளன என்றும், இந்த செய்தி வெளியானதால் அவரது மொபைல் உளவுபார்க்கப்பட்டது என்று பொருள் இல்லை என்றும் கூறியுள்ள அந்த அலுவலர், இது ஒரு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே என்றார்.