பிரான்சில் ஜனாதிபதி மேக்ரானை கன்னத்தில் அறைந்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரான்சில் ஜனாதிபதி மேக்ரானை கன்னத்தில் அறைந்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பிரான்சில் இருக்கும், Tain-l'Hermitage நகரில் உள்ள ஹோட்டல் பள்ளிக்கு, ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பிரச்சாரத்திற்காக சென்ற போது, அங்கிருந்த நபர் ஒருவர் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், பொலிசார் உடனடியாக இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
Emmanuel Macron gets slapped in the face by angry voter on campaign trail pic.twitter.com/Ky9gog1P2p
— The Sun (@TheSun) June 8, 2021
அதன் பின் இதற்கு காரணமானவர் Damien Tarel என்ற நபர் தான் என்பதை உறுதி செய்த பொலிசார், அவரை உடனடியாக நீதிப்மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, 18 மாத சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது.
இதில் நான்கு மாதங்கள் சிறையிலும்,14 மாதங்கள் சட்டக் காவல்கண்காணிப்பிலும் கழிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வருடங்களிற்கு இவர் மீதான கண்காணிப்பு தொடரும் எனவும், அதற்குள் வேறு குற்றம் புரிந்தால் முழுமையான காலத்தையும் சிறையிலேயே கழிக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வருடகாலத்தில், கட்டாமாக வேலை செய்தல் அல்லது பயிற்சி வகுப்புகளில் இணைதல் ஆகிய ஓன்றைச் செய்வேண்டும். அதேநேரம் மேலும் குற்றங்களைச் செய்யாமல் இருக்க, உளவியல் சிகிச்சைகளையும் பெறவேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உடனடியாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.