ராஜினாமா செய்தார் பிரான்ஸ் பிரதமர்: உண்மையாகிய கணிப்பு
நேற்று முன்தினம், பிரான்ஸ் ஜனாதிபதியும், பிரான்ஸ் பிரதமரும் அவசரமாக சந்தித்துப் பேசிய நிலையில், வடக்கு பிரான்சில் காணப்படும் பெருவெள்ளப் பிரச்சினை மற்றும் உறையவைக்கும் குளிர் தொடர்பில் விவாதிக்க இருவரும் சந்தித்துப் பேசியதாக ஜனாதிபதி அலுவலகம் கூறியது.
ஆனால், பிரான்ஸ் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும், அதற்காகவே ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தார்கள்.
ராஜினாமா செய்தார் பிரான்ஸ் பிரதமர்
அவர்கள் கணித்த விடயம் உண்மையாகியுள்ளது. ஆம், பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் (63) தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விடயம் என்னவென்றால், பிரான்சைப் பொருத்தவரை, பிரதமர் பதவியில் ஒருவரை அமர்த்துவது பிரான்ஸ் ஜனாதிபதி. ஆனால், அவரால் பிரதமரை பதவிநீக்கம் செய்யமுடியாது. ஆகவே, அவர் பிரதமரை ராஜினாமா செய்ய கோரவேண்டும்.
அதன்படி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரதமராக பதவி வகித்துவந்த எலிசபெத்தை ராஜினாமா செய்யக் கோர, எலிசபெத் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரதமரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
அடுத்த பிரதமர் யார்?
எலிசபெத் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்து யார் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறித்த கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
அவற்றில், கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால், பாதுகாப்புத்துறை அமைச்சர் Sebastien Lecornu, நிதி அமைச்சர் Bruno Le Maire மற்றும் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் Julien Denormandie ஆகியோருடைய பெயர்கள் அடங்கும்.
பிரான்ஸ் ஜனாதிபதி அடுத்த பிரதமரை அறிவிக்கும் வரை எலிசபெத் காபந்து பிரதமராக பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |