பிரான்ஸ் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகியுள்ள சம்பவம்
பிரான்சிலுள்ள பல சிறைகள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்ட விடயம் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
ஒரே இரவில் பல சிறைகள் மீது தாக்குதல்
பிரான்சிலுள்ள பல சிறைகள் மீது ஞாயிற்றுக்கிழமை முதல் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திவருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரான்சின் பல்வேறு சிறைகள் முன் நிறுத்தப்பட்டிருந்த சிறை அலுவலர்களின் 21 கார்கள் தாக்குதலுக்குள்ளாகின.
ஒன்றில் அவை தீவைக்கப்பட்டன அல்லது அவற்றின் மீது பெயிண்ட் மூலம் பெரிய பெரிய எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன.
சில கார்கள் மீது துப்பாக்கிக் குண்டுகளும் பாய்ந்திருந்தன.
இந்நிலையில், Tarascon நகரில் நேற்றிரவு மீண்டும் சிறை அலுவலர்களின் மூன்று கார்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று சிறை அலுவலர் ஒருவருக்கு சொந்தமானது.
தெற்கு பிரான்சிலுள்ள Aix-en-Provence நகரிலும் சிறையில் பணியாற்றும் ஒரு காவலரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
பாரீஸுக்கு அருகில், பெண் சிறைக்காவலர் ஒருவருடைய வீட்டு சுவரில் Rights of French Prisoners என்பதைக் குறிக்கும் வகையில் DDPF என்னும் எழுத்துக்கள் பெரிய அளவில் பெயிண்ட் மூலம் எழுதப்பட்டுள்ளன.
இதற்கிடையில், போதைக் கடத்தல் கும்பல்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துவருவதற்கெதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் நீதித்துறை அமைச்சரான Gérald Darmanin, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.