பிரான்சில் விடுதலையான நபரின் பைக்குள் மறைந்து தப்பிய கைதி
பிரான்சில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மாயமான விடயம் அதிகாரிகளை குழப்பமடையச் செய்துள்ளது.
விடுதலையான நபரின் பைக்குள் மறைந்து தப்பிய கைதி
பிரான்சிலுள்ள லியோன் நகருக்கு அருகில் அமைந்துள்ளது Corbas சிறை. சனிக்கிழமை காலை சிறையில் ரோந்து சென்ற அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட அறையிலிருந்த கைதி மாயமாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.
பாதுகாப்பு மிக்க சிறையிலிருந்து அந்த வயதுடைய கைதி எப்படித் தப்பினார் என்னும் விடயம் அதிகாரிகளை குழப்பமடையச் செய்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று இந்த 20 வயது கைதி தங்கியிருந்த அதே அறையில் தங்கியிருந்த மற்றொரு கைதி விடுதலையாகியுள்ளார்.
அவர் வைத்திருந்த பைக்குள் மறைந்து இந்த கைதி தப்பியதாக தற்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், 678 சிறைக்கைதிகள் மட்டுமே தங்கும் வசதிகொண்ட அந்த சிறையில் சுமார் 1,200 பேர் அடைக்கப்பட்டுள்ளார்களாம்.
ஆக, அந்த சிறை எப்போதுமே கூட்ட நெரிசல் உடையதாக இருக்குமாம். கூட்டத்தைப் பயன்படுத்தித்தான் அந்த கைதி தன் சக கைதியின் பைக்குள் மறைந்து தப்பியிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
தப்பியோடிய கைதி தலைமறைவாக உள்ள நிலையில், அவரை நாடு முழுவதும் தேடும் பணி துவக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |