பிரான்சில் இந்த மாவட்டத்தில் வரும் 2-ஆம் திகதி முதல் முகக்கவசம் கட்டாயம்! வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் குறிப்பிட்ட மாவட்டம் ஒன்றில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, முகக்கவசம் வரும் 2-ஆம் திகதி முதல் அங்கு கட்டாயமாக்கப்படுகிறது.
பிரான்சின் Pyrénées-Orientales மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்த படி உள்ளது. இதனால் இங்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 100000 பேரிலும் 210 பேருக்கு தொற்று ஏற்படுகின்றது.
தொற்று வீதம் அதிகரித்துள்ளதை அடுத்து, அங்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12-ஆம் திகதி இங்கு ஒவ்வொரு 100000 பேரிலும் 12.7 பேருக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், அடுத்த 15 நாட்களில் இந்த தொற்று 210-ஆக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, இங்கு அனைத்து பொது இடங்களிலும், போக்குவரத்துக்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், கடற்கரை தவிர்த்து அனைத்து இடங்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும், ஆகஸ்ட் 2-ஆம் திகதி சனிக்கிழமை முதல் இந்த புதிய விதி அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.