பிரான்சில் ரயிலில் பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி
பிரான்ஸ் நாடு முழுவதும் நாளை ரயில்வே யூனியன்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளன.
ரயிலில் பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி
நாளை, அதாவது, ஜூன் மாதம் 10ஆம் திகதி, பிரான்ஸ் நாடு முழுவதும் ரயில்வே யூனியன்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளன.
அதனால், ரயில் பயணிகள், தாமதம் அல்லது ரயில் சேவை ரத்து செய்யப்படும் நிலையை எதிர்கொள்ளக்கூடும்.

ஆகவே, முடிந்தவரை ரயில் சேவையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, பேருந்து அல்லது நண்பர்கள், சக அலுவலர்கள் இணைந்து ஒரே காரில் செல்லுதல் போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்வது நலம் என பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ரயில்வே துறையின் உள்கட்டமைப்பில் மாற்றங்கள் மற்றும் துணை நிலையங்கள் அமைப்பு போன்ற காரணங்களால், பணிசார் விபத்துகள், நோய் விடுப்பு, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளுதல் முதலான பல்வேறு துயர நிகழ்வுகள் அதிகரித்துவருகின்றன.
மேலும், பணிச்சூழல் மோசமாகிக்கொண்டே வருவது, போதுமான ஊதிய உயர்வு வழங்கப்படாதது ஆகிய காரணங்களை முன்வைத்து, இதற்கு முன் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் சரியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததே இந்த வேலை நிறுத்தத்துக்குக் காரணம் என ரயில்வே யூனியன்கள் தெரிவித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |