12 ஆண்டுகளுக்குப் பின் சிரியாவிலுள்ள தூதரகத்தில் கொடியேற்றிய பிரான்ஸ்
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பல பெரிய நாடுகள் முன்வந்துள்ளதை கவனித்திருக்கக்கூடும்.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின், சிரியா தலைநகர் டமாஸ்கஸிலுள்ள தங்கள் தூதரகத்தில் பிரான்ஸ் கொடி ஏற்றியுள்ளது.
சிரியாவிலுள்ள தூதரகத்தில் கொடியேற்றிய பிரான்ஸ்
சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாதின் வீழ்ச்சிக்கு சில நாடுகள் நேரடியாகவே மகிழ்ச்சி தெரிவித்தன.
சில நாடுகளோ, ஆட்சிப் பொறுப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவே முன்வந்துள்ளன.
இந்நிலையில், சிரிய ஜனாதிபதியாகிய பஷார் அல் அசாதுடனான உறவுகளை பிரான்ஸ் முறித்துக்கொண்டு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது தன் பங்குக்கு, சிரியா தலைநகர் டமாஸ்கஸிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தில் தன் நாட்டுக் கொடியை ஏற்றியுள்ளது பிரான்ஸ்.
அத்துடன், பிரான்ஸ் தூதர்கள், சிரியாவைக் கட்டுப்படுத்தும் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |