பிரித்தானியார்களுக்கு இது பொருந்தாது! பிரான்சில் 12 மில்லியனை தாண்டிய தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை
பிரான்சில் இதுவரை 12 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கான இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் படி பிரான்சிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த வைரஸிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்றால், 2 தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் படி பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 27 மில்லியன் பேர் தங்களது முதலாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர்.
அதே சமயம் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது இரண்டாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை, வரும் ஜூன் 9-ஆம் திகதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐரோப்பியர்கள் பிரான்சுக்கு PCR முடிவுகளின்றி வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விதி பிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு பொருந்தாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் இருந்து வருவோர், தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் PCR முடிவுகள் கட்டாயம் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.