கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய மைல் கல்லை எட்டிய பிரான்ஸ்! வைரஸை தடுக்க விற்பனைக்கு வரும் கவசம்: விலை எவ்வளவு?
கொரோனா வைரஸை தடுக்கும் திறன் கொண்ட முகக் கவசத்தை உருவாக்கியுள்ளதாக பிரான்ஸ் நிறுவனமான BioSerenity அறிவித்துள்ளது.
இந்த முகக் கவசத்தை, Lille பல்கலைக்கழக மருத்துவமனை மையம், தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரான்ஸ் தேசிய ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த முகக் கவசத்தை 4 மணி நேரங்களுக்கு மேல் அணியக்கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
bactericidal, antiviral chemicals cyclodextrin மற்றும் quaternary ammonia ஆகியவற்றுடன் நான்கு லேயர்களை இந்த முகக் கவசம் கொண்டுள்ளது.
ஐரோப்பிய தரமான FFP முகக் கவசத்தை செவ்வாய்க்கிழமை முதல் 1.49 யூரோக்கள் விலையில் ஆர்டர் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கான முகக் கவசத்தின் அறுவை சிகிச்சை வடிவம், பிப்ரவரி 22 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வர உள்ளது, இதன் விலை 0.44 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.