நெருக்கடி நிலையை அமுல்படுத்த தயாராகும் பிரான்ஸ்! கட்டுப்பாடுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் வியாழக்கிழமை முதல் நெருக்கடி நிலை அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டில் பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனாவை எதிர்கொள்ள பிராந்திய சுகாதார அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகளில் ‘நெருக்கடி அமைப்பை’ அமுல்படுத்த பிரான்ச தயாராகி வருதவாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை, பயன்படுத்த தயாராக இருக்கக்கூடிய மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அவசரமற்ற அறுவை சிகிச்சையை தாமதப்படுத்துதல் மற்றும் அனைத்து மருத்துவ ஊழியர்களையும் அணிதிரட்டுதல் ஆகியவை அடங்கும்.
கடந்த ஆண்டு மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் நாடு ஊரடங்கில் இருந்த போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தற்போது மீண்டும் விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நெருக்கடி அமைப்பு ஒவ்வொரு பிராந்தியத்திலும், மருத்துவமனை அழுத்தத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் செயல்படுத்தப்பட வேண்டும், பிப்ரவரி 18 வியாழக்கிழமை முதல் செயல்பட வேண்டும் என்று டிஜிஎஸ் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
உலகில் கொரோனாவால் பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் 6வது இடத்தில் உள்ளது. பிரான்ஸில் உறுதியான புதிய தொற்று பாதிப்புகளில் 25% பிரித்தானியாவில் தோன்றிய உருமாறிய கொரோனா என்பது குறிப்பிடத்தக்கது.