புடினிடமிருந்து ஐரோப்பாவை காப்பாற்ற பிரான்ஸ் நாட்டு அணு ஆயுதங்கள்: மேக்ரான் அதிரடி அறிவிப்பு
நேட்டோ அமைப்பில் இருப்பதால், ஏதேனும் பிரச்சினை வந்தால் சக நாடான அமெரிக்கா உதவும் என்ற நம்பிக்கையை ஐரோப்பிய நாடுகள் இழந்துவருகின்றன.
ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்தே அவரும் அவரது துணை ஜனாதிபதியும் ஐரோப்பாவை அவமதிக்கும் வகையில் பேசிவருகிறார்கள்.
மேலும், உக்ரைனுக்கு அளித்துவந்த நிதி உதவியையும், உளவுத்துறை ரீதியிலான உதவியையும் அமெரிக்கா நிறுத்திவிட்டது.
ஐரோப்பாவை காப்பாற்ற பிரான்ஸ் தயார்
ஆக, உக்ரைனை ஊடுருவிய ரஷ்ய ஜனாதிபதி புடின், மற்ற ஐரோப்பிய நாடுகள் மீதும் போர் தொடுப்பாரானால், உதவிக்கு அமெரிக்கா வருவது சந்தேகமே என்னும் சூழலே நிலவுகிறது.
இந்நிலையில், புடினிடம் இருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற ஆபத்பாந்தவனாக முன்வந்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
ஐரோப்பாவைக் காப்பாற்ற பிரான்ஸ் தனது அணு ஆயுதங்களையும் பகிர தயாராக இருப்பதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதம் குறித்த பேச்சு ஏன் எழுந்தது?
விடயம் என்னவென்றால், கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஜேர்மனியின் அடுத்த சேன்ஸலராக இருக்கும் பிரெட்ரிக் மெர்ஸ், பிரான்சுடன் அணு ஆயுத பகிர்வு குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்திருந்தார்.
[4GFH0P
பாரீஸும் லண்டனும், தங்கள் அணு ஆயுத பாதுகாப்பை எங்களுக்கும் விரிவாக்கம் செய்யுமா என்பதைக் குறித்து விவாதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார் அவர்.
அதன் தொடர்ச்சியாகவே, அமெரிக்கா உதவிக்கு வராத பட்சத்தில், ஐரோப்பாவைக் காப்பாற்ற பிரான்ஸ் தனது அணு ஆயுதங்களையும் பகிர தயாராக இருப்பதாக மேக்ரான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |