இரண்டு பொற்கால புத்தர் சிலைகள் 10,000 மனிதர்கள்... சிதைத்த தலிபான் தீவிரவாதிகள்: வரலாற்றை நினைவுகூரும் பிரான்ஸ்
ஆறாம் நூற்றாண்டில் புத்தரின் போதனைகள் பின்பற்றப்பட்டு வந்த காலகட்டத்தில், ஆப்கானிஸ்தானிலுள்ள Bamiyan என்ற இடத்தில் இரண்டு பிரம்மாண்ட புத்தர் சிலைகள் மலைகளில் செதுக்கப்பட்டன.
அவற்றில் ஒன்று 115 அடி உயரமும் மற்றொன்று 174 அடி உயரமும் கொண்டவை ஆகும். ஆனால், பொற்காலத்தின் நினைவாக உயர்ந்து நின்ற அந்த சிலைகளை 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் திகதி, தலிபான்கள் குண்டு வைத்து தகர்த்தனர்.
அதே காலகட்டத்தில், அந்த பகுதியில் வாழ்ந்த 10,000 ஹசாரா இன ஷியா பிரிவு இஸ்லாமியர்களையும் அவர்கள் கொன்று குவித்தனர்.
அந்த புகழ்பெற்ற புத்தர் சிலைகளை மேற்கத்திய உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்களான Joseph மற்றும் Ria Hackin என்பவர்கள்தான்.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாரீஸிலுள்ள Guimet அருங்காட்சியகம், அந்த சிலைகள் மற்றும் உயிரிழந்த 10,000 பேருக்கு அஞ்சலி செலுத்திவருகிறது.