பிரான்சில் முதல் முறையாக மனிதரை பாதித்த ஷாமொண்டா வைரஸ்: சுகாதார அமைச்சகம் தகவல்
France record his first human Shamonda virus infection: பிரான்சில் முதல் முறையாக மனிதரை ஷாமொண்டா வைரஸ் பாதித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மனிதரை பாதித்த ஷாமொண்டா வைரஸ்
ஐரோப்பிய நாடுகளில் கால்நடைகளை மட்டுமே பாதித்து வந்த ஷாமொண்டா வைரஸ், முதல் முறையாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை பாதித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்சின் லியோன் நகரில் கடுமையான நோய் எதிர்ப்பு குறைபாடுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், கடந்த அக்டோபர் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு ஷாமொண்டா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
1960ம் ஆண்டுகளின் மத்தியில் நைஜீரியாவில் முதன் முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸானது சிறிய பூச்சிகள் மூலம் கால்நடைகளுக்கு பரவி வந்தது.
இந்த கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்நடைகள் மத்தியில் இந்த ஷாமொண்டா வைரஸ் பரவ தொடங்கியது.
அந்த வகையில் பிரான்சின் கிழக்கு பகுதியில் கால்நடைகள் இடையே பரவி வந்த இந்த ஷாமொண்டா வைரஸ், பூச்சி கடியின் மூலம் உயிரிழந்த நோயாளிக்கும் பரவி இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதுவரை கால்நடைகளை மட்டுமே தாக்கி வந்த இந்த ஷாமொண்டா வைரஸ், தற்போது முதல் முறையாக மனிதரை பாதித்து இருந்தாலும் இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என பிரான்ஸின் சுகாதார மற்றும் விவசாய அமைச்சகங்கள் தெளிவுபடுத்தியுள்ளது.