200 பிரித்தானியர்களுக்கு அனுமதி மறுத்த பிரான்ஸ்: பின்னணி
2025ஆம் ஆண்டில் மட்டும், பிரான்சுக்குள் நுழைய 200 பிரித்தானியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய தரவுகள் தெரிவிக்கின்றன.
200 பிரித்தானியர்களுக்கு அனுமதி மறுப்பு
ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகம் செய்த Entry/Exit System (EES) முழுமையாக அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்களல்லாத 132,600 பேருக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 1,240 பேர் பிரித்தானியர்கள். அதிகபட்சமாக, 200 பிரித்தானியர்களுக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்த நாடு பிரான்ஸ்.
அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு, அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததும், முன்னர் அவர்கள் அனுமதிக்கப்பட்ட 90 நாட்களுக்கு அதிகமாக பிரான்சில் தங்கியதுமே பொதுவான காரணங்களாக அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |