பிரான்சிடம் பல மில்லியன் யூரோ அபராதம் செலுத்திய உரிமையாளர்... ரஷ்யாவின் எண்ணெய் கப்பல் விடுவிப்பு
ரஷ்யாவின் கடத்தல் எண்ணெய் கப்பலின் உரிமையாளர் பல மில்லியன் யூரோ அபராதம் செலுத்தியதை அடுத்து, தொடர்புடைய எண்ணெய் கப்பலை பிரான்ஸ் நிர்வாகம் விடுவித்துள்ளது.
பிரெஞ்சுப் படை
ரஷ்யாவில் இருந்து எண்ணெயுடன் புறப்பட்ட Grinch என்ற கப்பலை, கடந்த மாதம் ஸ்பெயினுக்கும் மொராக்கோவிற்கும் இடையில் பிரெஞ்சுப் படைகளும் அதன் நேச நாடுகளும் இணைத்து முன்னெடுத்த நடவடிக்கையை அடுத்து கைப்பற்றின.

தொடர்புடைய எண்ணெய் கப்பல் பின்னர் தெற்கு நகரமான மார்சேய்க்கு வெளியே உள்ள ஒரு துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. குறித்த கப்பலானது தென்கிழக்கு ஆப்பிரிக்க தீவு நாடான கொமரோஸ் கொடியுடன் காணப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் தமது சமூக ஊடகத்தில், ஃபோஸ்-சுர்-மெரில் மூன்று வாரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த Grinch என்ற எண்ணெய் கப்பல், பல மில்லியன் யூரோக்கள் அபராதமாக செலுத்தியுள்ளதை அடுத்து பிரெஞ்சு கடற்பரப்பை விட்டு வெளியேறுகிறது என பதிவு செய்துள்ளார்.
அபராதம் விதித்ததாக
அத்துடன், ஐரோப்பிய தடைகளைத் தவிர்ப்பவர்கள் கண்டிப்பாக அதற்கான ஒரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். ரஷ்யா இனி நமது கடற்பகுதியிலிருந்து கடத்தல் கப்பல் மூலமாக ஆதாயம் பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, குற்ற ஒப்புதல் நடைமுறையின் ஒரு பகுதியாக, கப்பலின் உரிமையாளருக்கு மார்சேய் நீதித்துறை நீதிமன்றம் அபராதம் விதித்ததாக அரசு சட்டத்தரணி அலுவலகம் மற்றும் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து செயல்படும் அந்த நிறுவனம், விரைவில் ஒரு புதிய கொடியைப் பெறுவதற்கு உறுதியளித்துள்ளது எனவும் ஒரு கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், Grinch எண்ணெய் கப்பலின் உரிமையாளர் எந்த நாட்டவர் என்பதை குறிப்பிட மறுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |