பிரான்சில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிப்பு
France reports bird flu outbreak on farm in north of country: வட பிரான்சிலுள்ள பண்ணை ஒன்றில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, உலக நாடுகள் பல, பறவைக்காய்ச்சல் பரவல் காரணமாக இறைச்சி விநியோகத்தில் பாதிப்பு, விலை உயர்வு மற்றும் மனிதர்களுக்கு நோய் பரவும் அபாயம் குறித்த கவலை ஆகிய பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றன.
பிரான்சில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிப்பு
கடந்த புதன்கிழமையன்று, பிரான்ஸ் அரசு, பறவைக்காய்ச்சல் தொடர்பில் உயர் மட்ட எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், பறவைகளை வெளியே மேயவிடாமல் கூண்டுகளுக்குள் அடைத்துவைப்பது முதலான கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில், மறுநாள், அதாவது, வியாழக்கிழமையே, வட பிரான்சிலுள்ள Pas-de-Calais பகுதியில் அமைந்துள்ள ஒரு பண்ணையில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பண்ணையில் 4,300 பறவைகள் இருந்த நிலையில், அவற்றில் 80 பறவைகள் பறவைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துவிட்டதாக பாரீஸை மையமாகக் கொண்ட கால்நடைகள் நலனுக்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து மீதமுள்ள பறவைகளும் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.