பிரான்சில் சகஜநிலைக்கு திரும்பி வரும் மக்கள்! முக்கிய இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை
பிரான்சில் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி வருவதாக நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் குறைந்து வருவதால், அங்கு கட்டுப்பாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது.
அதன் படி நாட்டின் Seine-et-Marne மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயமில்லை, Vendée கடற்கரைக்கு முகக்கவசம் அணியவேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி வருவதாக கூறியுள்ளார். மேலும், அவர் பிரான்ஸ் தேசத்தின் தேசிய முன்னுரிமை சாதாரண வாழக்கைக்கு மக்களைத் திரும்பச் செய்துள்ளது.
கொரேனாத் தடுப்பு ஊசி மூலம் தம்மை பாதுகாத்து, ஒன்றிணைந்து, மிகவும் விழிப்புடனும், கவனமுடனும், ஒவ்வொருவரும் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்து, வாழ்கையின் சமநிலையைப் பேண வேண்டும் என இன்று Aube நகரத்திற்குச் சென்றிருந்த மேக்ரான கூறினார்.