பிரான்சில் வேகமெடுக்கும் ஒமைக்ரான் வைரஸ்! இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?
பிரான்சில் புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக நாட்டின் அரச ஊடக செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
புதிய மாறுபாடு கொண்ட ஒமைக்ரான கொரோனா வைரஸ், இப்போது ஐரோப்பிய நாடுகளில் பரவ துவங்கியுள்ளது. பிரித்தானியாவில் இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது பிரான்சில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டின் அதிகாரப்பூர்வ அரசு செய்தித் தொடர்பாளர் Gabriel Attal, இதை உறுப்படுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் கூறுகையில், இப்போது நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் போன்று, முன்பு எப்போதும் மேற்கொள்ளப்படவில்லை. ஒமைக்ரான் மாறுபாடு, நாட்டில் வேகமாக பரவி வருகிறது.
இதனால், கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது, வைரஸால் எளிதில் பாதிக்கப்பட கூடியவர்கள், மிகவும் பலவீனமானவர்கள் ஆகியோரை சோதனையிட திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
அதே சமயம் பிரித்தானியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், பிரான்சுக்கு திரும்பும் பிரித்தானியர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விரைவில், கடுமையாக்கப்படலாம் என்று தெரிவித்தார்.
பிரான்ஸை பொறுத்தவரை இன்றைய (டிசம்பர் 14-ஆம் திகதி) நிலவரப்படி கொரோனா வைரஸால் 130 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.