2026 முதல் பிரான்சில் தன்னார்வ ராணுவ சேவை திட்டம் தொடக்கம்
2026 முதல் பிரான்சில் தன்னார்வ ராணுவ சேவை திட்டம் தொடங்கப்படவுள்ளது.
பிரான்ஸ் அரசாங்கம், 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களுக்காக புதிய தன்னார்வ ராணுவ சேவை திட்டத்தை 2026 நடுப்பகுதியில் தொடங்க உள்ளதாக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் மற்றும் ரஷ்யாவின் தாக்குதல்மிகு நிலைப்பாட்டை முன்னிட்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
“எங்கள் கூட்டாளிகள் அனைவரும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க வேண்டும். பிரான்ஸ் அமைதியாக இருக்க முடியாது” என இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- இத்திட்டம் 18-19 வயதுடைய இளைஞர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
- சேவை 10 மாத காலம் நீடிக்கும்.
- பங்கேற்பாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
- 2026-ல் 3,000 பேர் சேர்க்கப்படுவார்கள், 2030-க்குள் 10,000-ஆக அதிகரிப்பது இலக்காகும்.
- செலவு: 2 பில்லியன் யூரோ (சுமார் 2.32 பில்லியன்டொலர்).
- சேவை பிரான்ஸ் நாட்டுக்குள் மட்டுமே, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படமாட்டார்கள்.
- பங்கேற்பாளர்கள் பின்னர் பொதுவாழ்க்கைக்கு திரும்பலாம், ரிசர்வ் படையில் சேரலாம் அல்லது நிரந்தரமாக ராணுவத்தில் தொடரலாம்.
பிரான்ஸ் அரசாங்கம் 2030-க்குள் ரிசர்வ் படையினரை 80,000-ஆக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்துள்ளது.
சமீபத்தில், பிரான்ஸ் ராணுவத் தலைமை அதிகாரி ஜெனரல் ஃபேபியன் மாண்டன், “நாட்டை காப்பாற்ற தியாகம் செய்யும் மனப்பக்குவம் பிரான்சில் குறைவாக உள்ளது” எனக் கூறியதால் சர்ச்சை எழுந்தது.
இதை மேக்ரோன் உடனடியாக மறுத்து, “இளைஞர்களை உக்ரைனுக்கு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை” என விளக்கம் அளித்தார்.
ஐரோப்பிய நாடுகளில் பலவும் இதேபோன்ற திட்டங்களை ஏற்கனவே தொடங்கியுள்ளன. ஜேர்மனி, பெல்ஜியம், போலந்து ஆகிய நாடுகள் தன்னார்வ ராணுவ சேவையை ஊக்குவிக்கின்றன.
அதேசமயம், ஆஸ்திரியா, கிரீஸ், பின்லாந்து, ஸ்வீடன் போன்ற 10 நாடுகளில் கட்டாய ராணுவ சேவை இன்னும் நடைமுறையில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France voluntary military service 2026, Emmanuel Macron military service plan, France youth army training scheme, French reservists target 2030, NATO Europe military readiness, France defense policy updates, Macron speech Varces Alps brigade, France 2 billion Euro defense program, French military service for youth, Europe voluntary conscription trends