பிரான்ஸ் கலவரத்தால் உயிரிழந்த 27 வயது நபர்: காரணமான 3 பொலிஸ் அதிகாரிகள் கைது
பிரான்ஸில் சமீபத்தில் ஏற்பட்ட நாடு தழுவிய ஆர்பாட்டத்தின் போது 27 வயதுடைய நபர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் ஏற்பட்ட கலவரம்
பிரான்ஸின் பாரிஸுக்கு வெளியே போக்குவரத்து சிக்னலில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நஹெல் என்ற 17 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.
இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மற்றும் ஜூலை தொடக்கத்தில் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டு கலவரங்கள் வெடித்தது.
AFP
இந்த கலவரங்களை பொலிஸார் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஒருவழியாக கட்டுப்படுத்தினர்.
அத்துமீறிய 3 பேர் பொலிஸ் அதிகாரிகள் கைது
இந்நிலையில் பிரான்ஸ் கலவரத்தில் கலந்து கொண்ட 27 வயதுடைய நபர் பொலிஸாரின் அத்துமீறலால் உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்சேயில் உயிரிழந்தவரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட உடற் பகுப்பாய்வில் பொலிஸார் வழக்கமாக பயன்படுத்தும் குண்டு வெடிப்புப் பந்தின் தாக்கம் அவரது மார்பில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மொஹமட் பெண்டிரிஸ் என்ற நபர் திருமணமானவர், அத்துடன் முதல் குழந்தையுடன் தற்போது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து கொண்டு இருந்தார். அவர் சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடல்நலக் குறைவுக்கு காரணமாக இருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் மீது ஆயுத வன்முறை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |