Rolex, Louis Vuitton கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட ஆடம்பர பொருட்கள் தெருக்களில் விற்பனை
Looted luxury goods sold cheap in France streets: பிரான்ஸ் கலவரங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ஆடம்பர பொருட்கள் தெருக்களில் மலிவாக விற்பனை செய்யப்படுகிறது.
பிரான்ஸ் கலவரங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ஆடம்பர பொருட்கள்
பிரான்சில் மாணவர்கள் கல்வி குறைபாடுகள் குறித்து எழுப்பிய போராட்டம், விரைவில் பெரும் கலவரமாக மாறியது. கலவரங்களின் போது ஆடம்பர கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள், ஆடை கடைகள் என பல இடங்கள் தாக்கப்பட்டன.

குறிப்பாக Louis Vuitton, Hermès, Dior, Rolex போன்ற உயர்தர பிராண்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதிகாரிகள் தெரிவித்ததன்படி, சுமார் 4.25 மில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதில் மார்செய்லில் உள்ள ரோலெக்ஸ் கடையில் மட்டும் 3 மில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்கள், போர்டோவில் உள்ள லூயி வுட்டன் கடையில் 1.25 மில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்கள் இழந்ததாக கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பரவிய சரிபார்க்கப்படாத வீடியோக்களில், மக்கள் டிசைனர் பைகள், வாட்ச்கள், பர்ஃப்யூம்கள், காஸ்மெட்டிக்ஸ் போன்ற பொருட்களை தெருக்களில் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வது போலக் காணப்படுகிறது. சிலர் 90 சதவீதம் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், Vinted என்ற ஆன்லைன் ரீ-சேல் தளத்தில் கூட கொள்ளையடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்கள் விற்பனைக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Goods allegedly looted from shops during France’s October 17 unrest are reportedly being resold, with suspicious listings circulating online. France has urged platforms like eBay to remove suspected stolen goods and cooperate. #France #FranceRiots #Looting #Paris https://t.co/BTxeUGLqot
— Molitics English (@MoliticsEnglish) October 20, 2026
BBC தெரிவித்ததன்படி, அந்த தளத்தில் Louis Vuitton, Celine, Hermès போன்ற பிராண்டுகளின் பொருட்கள் பதிவேற்றப்பட்டிருந்தன. தளம் உடனடியாக அவற்றை நீக்கியதாக கூறியுள்ளது.
இந்த கலவரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. பல நகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் தாக்கப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன, அரசு அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டன.
மாணவர்களின் கல்வி குறைபாடுகள் குறித்த கோரிக்கையிலிருந்து தொடங்கிய இந்த போராட்டம், விலைவாசி, பணவீக்கம் போன்ற பிரச்சினைகளால் மக்கள் கோபம் அதிகரித்து, “Tax the Rich” போன்ற வாசகங்கள் கடைகளின் சாளரங்களில் எழுதப்பட்டன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |