பிரான்ஸ் நாட்டில் கொரோனா ஐந்தாவது அலை தொடங்கிவிட்டதா? சுகாதார அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்
பிரான்சில் கொரோனா ஐந்தாவது அலை பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா பரவல் உலகம் முழுவதும் பயங்கர வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா வீரியம் குறைந்து வருகிறது.
ஆனால் சீனா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அந்த நாட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கொரோனா தொற்று 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று மட்டும் சுமார் 11,883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா ஐந்தாவது அலையின் தொடக்கத்தை உணர்வதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, சில அண்டை நாடுகள் ஏற்கனவே கொரோனாவின் ஐந்தாவது அலையை சந்தித்து வருகின்றனர்.
அது போல எங்கள் நாட்டில் நாங்கள் உணர்வது கொரோனாவின் ஐந்தாவது அலையின் தொடக்கமாக இருக்கலாம் என தெளிவாகத் தெரிகிறது என கூறியுள்ளார்.