ஒலிம்பிக்கில் 184 நாடுகளின் வீரர்களைவிட அதிக தங்கப்பதக்கங்கள் பெற்ற வீரர்
நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில், அமெரிக்கா, 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சீனா, 40 தங்கம், 27 வெள்ளி 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தையும், ஜப்பான். 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய பிரான்ஸ் நாட்டுக்கு 64 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் தங்கப்பதக்கங்கள் 16, வெள்ளிப்பதக்கங்கள் 26 மற்றும் வெண்கலப்பதக்கங்கள் 22.
184 நாடுகளின் வீரர்களைவிட அதிக தங்கப்பதக்கங்கள் பெற்ற பிரான்ஸ் வீரர்
ஆனால், பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்ற பிரான்சுக்கு, மற்ற எந்த நாடுகளுக்கும் கிடைக்காத ஒரு பெருமை கிடைத்துள்ளது.
அது என்னவென்றால், ஒலிம்பிக்கில் 184 நாடுகளின் வீரர்களைவிட, பிரான்ஸ் வீரர் ஒருவர் அதிக தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார் என்பதுதான் அது.
அவரது பெயர், Léon Marchand (21). தனி நபர் பெற்ற பதக்கங்களில் அவர் மட்டுமே நான்கு தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளார். கூடவே, அணியாக விளையாடிய தடகளப்போட்டி ஒன்றில் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார் அவர்.
அது மட்டுமல்ல, தான் தங்கம் வென்ற நான்கு போட்டிகளிலும், புதிய உலக சாதனையும் படைத்துள்ளார் நீச்சல் வீர்ரான Léon Marchand என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |