பிரான்சில் மூட்டைப்பூச்சி பிரச்சினைக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் தொடர்பு: சர்ச்சையை உருவாக்கியுள்ள ஊடகவியலாளர்
உலகத்தில் என்ன பிரச்சினை வந்தாலும், அதற்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்று சொல்வார்கள் போலிருக்கிறது.
பிரான்சில் மூட்டைப்பூச்சி பிரச்சினைக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் தொடர்பு உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார் ஊடகவியலாளர் ஒருவர்!
சர்ச்சையை உருவாக்கியுள்ள ஊடகவியலாளர்
இணையத்தில் எந்த தளத்தில் பிரான்ஸ் செய்திகளைப் பார்த்தாலும், பாரீஸில் நிலவும் மூட்டைப்பூச்சிப் பிரச்சினையைக் குறித்துத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை மறக்கும் அளவுக்கு, மூட்டைப்பூச்சி பிரச்சினையைக் குறித்து செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், பிரான்சில் மூட்டைப்பூச்சி பிரச்சினைக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் தொடர்பு உள்ளதா என கேள்வி எழுப்பி சர்ச்சை ஒன்றைத் துவக்கிவைத்துள்ளார் ஊடகவியலாளர் ஒருவர்.
AFP via getty image
Pascal Praud (59) என்னும் வலதுசாரி தொலைக்காட்சி வர்ணனையாளர், விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, பிரான்சில் புலம்பெயர்தல் அதிகரித்துவருவதற்கும், மூட்டைப்பூச்சிகள் பரவலுக்கும் தொடர்பு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
இப்போது பிரான்சில் அதிக அளவில் புலம்பெயர்தல் நிகழ்கிறது என்று கூறிய Praud, பிரான்சுக்கு வந்துள்ள இந்த புலம்பெயர்ந்தோர், பிரான்ஸ் மக்கள் அளவுக்கு சுய சுத்தமுள்ளவர்கள் அல்ல, அப்படியிருக்கும்போது, பிரான்சில் புலம்பெயர்தல் அதிகரித்துவருவதற்கும், மூட்டைப்பூச்சிகள் பரவலுக்கும் தொடர்பு இருக்குமா என்று கேட்டார்.
உருவாகியுள்ள எதிர்ப்பு
புலம்பெயர்ந்தோர் குறித்த Praudஇன் கருத்தால் பிரான்சில் சர்ச்சை உருவாகியுள்ளது. இமானுவல் மேக்ரானின் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் உட்பட பலர் அவரது கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Praudஇன் கருத்துக்கள் இனவெறுப்புக் கருத்துக்கள் என்று கூறியுள்ளார் La France Insoumise கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Aurelien Saintoul.
பாகுபாடுக்கெதிராக போராடும் துறைசார் அமைச்சரான Bérangère Couillard, Praudஇன் கருத்துக்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மக்கள் எந்த அளவுக்கு சுத்தமானவர்கள்?
விடயம் என்னவென்றால், உலக நாடுகள் பலவற்றில், பிரான்ஸ் மக்கள் சுத்தமில்லாதவர்கள், அவர்கள் எப்போதாவதுதான் குளிப்பார்கள், தங்கள் உடலில் வீசும் நாற்றத்தை மறைக்கவே அவர்கள் ஏராளம் வாசனை ஸ்பிரே, சென்ட் முதலானவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்னும் கருத்து இப்போதும் நிலவுகிறது.
Quand Pascal Praud fait un parallèle entre punaises de lit et immigration. Réalisé sans trucage. pic.twitter.com/qv3LQqf4Xg
— Florian Guadalupe (@FlorianGua) September 29, 2023
சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான ஒரு பேட்டியில், பிரான்ஸ் மக்களின் சுய சுத்தம் குறித்து உலகில் நிலவிவரும் கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் விளக்கமளிக்கும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது.
அதில், வேறு வழியில்லாமல், ஒரு காலத்தில் பிரான்ஸ் மக்கள் சுத்தமில்லாமல் இருந்தது உண்மைதான், ஆனால் இப்போது அப்படியல்ல என அவர் விளக்கமளிக்கும் தர்மசங்கடமான நிலை உருவானது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |