பிரான்சின் முதல் AI அமைச்சர் தேர்ந்தெடுப்பு: புதிய அமைச்சரவை குறித்த சில தகவல்கள்
பிரான்ஸ் நாட்டில் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் அரசு அமைக்கப்படாமல் இழுபறி நீடித்த நிலையில், நேற்று புதிய அரசு குறித்த விவரங்களை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை குறித்த சில தகவல்கள்
பிரான்சின் புதிய அமைச்சரவை, பிரதமர் மிஷெல் பார்னியேர் தலைமையில் அமைக்கப்படுகிறது.
புலம்பெயர்தல் முதலான விடயங்களுக்கு பொறுப்பான உள்துறை அமைச்சராக Bruno Retailleau பொறுப்பேற்க, ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு நெருக்கமானவரான Sebastien Lecornu பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், Jean-Noel Barrot வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்கிறார்கள்.
இடதுசாரிகள் தரப்பிலிருந்து Didier Migaud நீதித்துறை அமைச்சராகவும், Antoine Armand நிதியமைச்சராகவும் பொறுப்பேற்கிறார்கள்.
முதல் AI துறை அமைச்சர்
முதன்முறையாக, பிரான்ஸ் Clara Chappaz என்பவரை AI துறை அமைச்சராக தேர்வு செய்துள்ளது.
மாகாணங்கள் செயலராகவும், AI மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சராகவும் Clara பொறுப்பு வகிக்க இருக்கிறார்.
பிரான்ஸ் நாடு, உலகில், தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், முதன்முறையாக AI துறை அமைச்சர் என்னும் பதவியை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |