இந்திய பிரபலம் ஒருவருக்கு பிரான்சின் உயரிய விருது...
பன்முகத்திறன் கொண்ட இந்திய பிரபலம் ஒருவருக்கு பிரான்ஸ் தனது உயரிய விருதான செவாலியே விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
இந்திய பிரபலம் ஒருவருக்கு பிரான்சின் உயரிய விருது...
எழுத்தாளர், தூதர், அரசியல்வாதி என பலமுகம் கொண்டவர் சசி தரூர். அவருக்கு பிரான்ஸ் தனது உயரிய விருதான 'Chevalier de la Légion d'Honneur', அல்லது Knight of the Legion of Honour என்னும் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
நேற்று இந்திய தலைநகரான புதுடெல்லியில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில், சசி தரூருக்கு செவாலியே விருது வழங்கப்பட்டது. பிஎஞ்சு தூதரகத்தில், பிரான்ஸ் செனேட் தலைவரான Gerard Larcher, சசி தரூருக்கு அந்த விருதை வழங்கினார்.
PTI
பிரெஞ்சு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை
அது தொடர்பாக பிரெஞ்சு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியா பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்த டாக்டர் சசி தரூரின் அயராத முயற்சிகள், சர்வதேச அமைதி மற்றும் ஒத்துழைப்பிற்கான அர்ப்பணிப்பு மற்றும் பிரான்சின் நீண்டகால நண்பராக இருந்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில், 2022ஆம் ஆண்டு, ஆகத்து மாதமே இந்த விருது அறிவிக்கப்பட்டது, ஆனால் செவ்வாயன்றுதான் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக் கொண்ட தரூர், செவாலியே விருதை ஏற்றுக்கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
பிரான்ஸ், அதன் மக்கள், அவர்களுடைய கள்ளங்கபடமில்லா குணம், அவர்களுடைய மொழி மற்றும் கலாச்சாரம், குறிப்பாக அவர்களின் இலக்கியம் மற்றும் சினிமா ஆகியவற்றைப் பெரிதும் மதிப்பவன் என்ற முறையில், உங்கள் நாட்டின் உயரிய விருது எனக்கு வழங்கப்படுவதில் நான் கௌரவமாக கருதுகிறேன் என்றார் அவர்.
அத்துடன், உலக சமூகத்தின் முன்னேற்றத்துக்காக, இரு நாடுகளுக்கும் இடையே மேலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தனது முயற்சிகளை தொடர இருப்பதாகவும் சசி தரூர் உறுதியளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |