பிரபல இந்தியப் பாடகிக்கு பிரான்சின் உயரிய விருது
இந்தியப் பாடகி ஒருவருக்கு பிரான்சின் உயரிய விருதொன்று வழங்கப்பட உள்ளது.
அந்த விருது அவர் சார்ந்த துறைக்காக மட்டுமல்ல, இந்தோ பிரான்ஸ் உறவுகள் மேம்படுவதில் அவரது பங்களிப்பிற்காகவும்தான்.
இந்தியாவைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகியான அருணா சாய்ராம், பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அருணா, கர்நாடக இசைப் பாடகி, இசையமைப்பாளர், மனிதநேயர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவராவார்.
அருணாவுக்கு இந்த விருது அவர் சார்ந்த துறைக்காக மட்டுமல்ல, இந்தோ பிரான்ஸ் உறவுகள் மேம்படுவதில் அவரது பங்களிப்பிற்காகவும் கொடுக்கப்பட உள்ளது.
image - deccanherald
அருணாவுக்கு செவாலியே விருதை அறிவித்த இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதரான Talbot Barré, உங்கள் துறை சார் திறமை மற்றும், பிரான்ஸ் மற்றும் சர்வதேச கலைத்துறைக்கு நீங்கள் அளித்துள்ள பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரிப்பதற்கு அடையாளமாக எனது நாடு இந்த விருதை ஏகமனதாக உங்களுக்கு வழங்குகிறது என்றார்.
கர்நாடக சங்கீதத்தின் அழகையும் நுணுக்கத்தையும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் கொண்டு சென்றுள்ளீர்கள்.
இந்த விருது, பிரான்சுடன் நீங்கள் எப்போதும் கொண்டிருக்கும் நட்புறவை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார் இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதரான Talbot Barré.