பிரான்சில் மகாத்மா காந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ள இடங்கள்: ஒரு ஆச்சரிய தகவல்
அக்டோபர் மாதம் 2ஆம் திகதி மகாத்மா காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், பிரான்சில் அவரது பெயர் வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ஆச்சரிய தகவல்
மகாத்மா காந்தி இந்திய விடுதலைக்காக போராடியவர்களில் ஒருவர் என்பதால், இந்தியா அவர் பெயரை, தெருக்கள், கட்டிடங்களுக்கு வைப்பது சாதாரண விடயம்.
ஆனால், பிரான்சில் மகாத்மா காந்தி பெயரில் பல தெருக்கள், கட்டிடங்கள், சதுக்கங்கள் உள்ளன என்றால், அது ஆச்சரியம்தானே!
நேற்று மகாத்மா காந்தியின் 154ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், ட்விட்டர் அல்லது எக்ஸ் பயனரான François-Xavier Durandy என்பவர், இந்த ஆச்சரிய தகவல் குறித்த ஒரு இடுகையை வெளியிட்டுள்ளார்.
Map of France showing a selection of cities having a street, avenue, or square named after Mahatma #Gandhi. pic.twitter.com/1zRTH3H8g9
— François-Xavier Durandy (@fxdurandy) October 2, 2023
அவர் பிரான்ஸ் நாட்டின் வரைபடத்தை வெளியிட்டு, அதில் மகாத்மா காந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ள இடங்களை அடையாளப்படுத்தியுள்ளார்.
மைய பிரான்சில் மட்டுமல்ல
அது மட்டும் இல்லாமல், பிரான்சுக்கு சொந்தமான ரீயூனியன் தீவிலும் மகாத்மா காந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ள இடங்களை வரைபடத்தில் குறித்துள்ளார் Durandy.
மேலும், கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 1ஆம் திகதி, பாரீஸ் புறநகர்ப்பகுதியான Grigny என்னுமிடத்தில், தெரு ஒன்றிற்கு மகாத்மா காந்தியின் பெயர் வைக்கப்பட்ட பெயர்ப்பலகையை, அந்த இடத்தின் மேயரான Philippe Rio மற்றும் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதரான Jawed Ashraf ஆகியோர் திறந்துவைக்கும் நிகழ்ச்சியைக் காட்டும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார் Durandy.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |