சுற்றுலாப்பயணிகளைக் கவர பிரான்ஸ் அரசு வகுத்துள்ள புதிய திட்டம்
இந்த கோடையில் பிரான்சுக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகளுக்காக பிரான்ஸ் ஒரு திட்டம் வைத்துள்ளது. அதன்படி, பிரான்ஸ் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவசமாக பி சி ஆர் முறையில் கொரோனா பரிசோதனைகள் செய்ய இருப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
தன் நாட்டு மக்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை, அதுவும் பி சி ஆர் முறையில் செய்யும் ஒரு சில நாடுகளில் பிரான்சும் ஒன்று. தற்போது, அது பிரான்சுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய உள்ளது.
இலவச கொரோனா பரிசோதனை, அதுவும் பி சி ஆர் முறையில் வழங்கப்படுவதால், சுற்றுலாப்பயணிகள் கவரப்படுவார்கள் என பிரான்ஸ் அரசு நம்புகிறது. ஒரு பக்கம் சுற்றுலாப்பயணிகள், மறுபக்கம் பாதுகாப்பு என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
Les tests #pcr seront gratuits cet été pr les étrangers qui viendront en vacances en France. C'est 1 élément d'attractivité dit @CBeaune sur @Europe1 ds le grand rendez vous d'@aurelherbemont. Qd on sait que c'est 100 € le test en Espagne pr 1 famille la gratuité peut être 1 +
— Emmanuel Duteil (@EmmanuelDuteil) May 16, 2021