கட்டுமரப் பயணத்துக்கு மீண்டும் திரும்பும் பிரான்ஸ் மக்கள்
புவி வெப்பமயமாதல் குறித்து கொஞ்சம் பேருக்காவது உண்மையான அக்கறை உள்ளதைப் பார்ப்பது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.
கட்டுமரப் பயணத்துக்கு திரும்பும் பிரான்ஸ் மக்கள்
இயந்திரப் படகுகள் கண்டுபிடிக்கப்படும் காலத்துக்கு முன் மக்கள் பாய்மரப்படகுகளில் பயணிப்பதும் கட்டுமரத்தில் மீன் பிடிக்கச் சென்றதும் சாதாரண விடயமாக இருந்தது.
ஆனால், உலகம் வேகத்தை விரும்பத் துவங்கியபின் இயந்திரப் படகுகளும் ஆடம்பர சுற்றுலா கப்பல்களும் இந்த பாய்மரப்படகுகளின் இடத்தைப் பிடித்துக்கொண்டன.
இந்நிலையில், பிரான்ஸ் மக்கள் மீண்டும் பாய்மரப்படகுகள் மற்றும் கட்டுமரங்களில் சுற்றுலா செல்லத் துவங்கியுள்ளார்கள்.
இயந்திரப் படகுகளை ஒப்பிடும்போது, இந்தப் படகுகள் வெளியேற்றும் நச்சுவாயுக்களின் அளவு குறைவே என்பதால் இந்த பயணம் சுற்றுச்சுழலுக்கு உகந்ததாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |